திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இருந்து உடன்குடி, நாசரேத்திற்கு செல்லும் புதிய பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
திருச்செந்தூரில் இருந்து உடன்குடிக்கு சோனகன்விளை, பூச்சிக்காடு, காயாமொழி வழித்தடங்களிலும், திருச்செந்தூரில் இருந்து நாசரேத்திற்கு காயல்பட்டினம், ஆறுமுகநேரி, நாலுமாவடி வழித்தடங்களிலும் ஏற்கனவே மகளிர் விடியல் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
அந்த வழித்தடங்களுக்கு 2 புதிய பஸ்கள் இயக்கும் விழா திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
நிகழ்வில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், தாசில்தார் பாலசுந்தரம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் ரமேஷ், திருச்செந்தூர் கிளை மேலாளர் ராஜசேகர், நகராட்சி தலைவர்கள் திருச்செந்தூர் சிவஆனந்தி, காயல்பட்டினம் முத்து முகமது, திமுக வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்ஜே ஜெகன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் செங்குழி ரமேஷ், சதீஸ்குமார், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை, நகர அவைத்தலைவர் சித்திரைக்குமார், சார்பு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கேடிசி முருகன், தங்கபாண்டி, மகாவிஷ்ணு, பிரபின், சுரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், ஆனந்த ராமச்சந்திரன், ரேவதி கோமதிநாயகம், காயல்பட்டினம் கவுன்சிலர் சுகு, முன்னாள் கவுன்சிலர் மணல்மேடு சுரேஷ், உடன்குடி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அஷாப், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பள்ளிப்பத்து ரவி, மேல திருச்செந்தூர் மகாராஜன், தொமுச திருச்செந்தூர் கிளை தலைவர் அரவிந்த சோழன், செயலாளர் ஜெயக்குமார் மத்திய சங்க நிர்வாகிகள் முருகன், மாரியப்பன், செல்வகுமார், மகளிரணி மாநில பிரச்சார குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, வேலம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



