மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைபடி நிவாரணம் (டிஆர்) 2% உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.
தமிழ்நாடு அகவிலைப்படி கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொதுவாக மத்திய அரசு எவ்வளவு அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதே அளவிற்குத்தான் தமிழ்நாடு அரசும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டது. இந்த முறை மத்திய அரசு சார்பாக 2% உயர்வு என்பது நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ.360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. இதே அளவு அல்லது 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. அடிப்படை ஊதியம் 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜூலை-டிசம்பர் 2024 அகவிலைப்படி 3% அதிகரித்து 53% ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதில் மேலும் 2% உயர்த்தப்பட்டு 55% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க பல கோடி ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது. இதோடு அரியர் தொகை தொடர்பான விளக்கமும் தற்போது வெளியாகி உள்ளது. ஜனவரி டூ மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு மட்டும் அரியர் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1080 ரூபாய் வரி இவர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.



